சரத்பாபு மறைவு: நெருக்கமான பழக்கம் பொறுக்க முடியாத துயரம் தருகிறது - வைரமுத்து இரங்கல்

சரத்பாபுவின் புன்னகை மரணத்தை மறக்கச்செய்கிறது என கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.;

Update:2023-05-22 19:38 IST

சென்னை,

பிரபல நடிகரான நடிகர் சரத்பாபு இவர் கடந்த நாட்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் ஏஜிஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், கவிஞர் வைரமுத்து தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

சரத்பாபு

ஒரு கண்ணியக் கலைஞர்

பண்பாட்டு மதிப்பீடுகள் மிக்க பாத்திரங்களுக்குத்

தன் நடிப்பால்

தங்கமுலாம் பூசியவர்

நான்

வசனம் பாடல்கள் எழுதிய

'அன்றுபெய்த மழையில்' படத்தின்

நெருக்கமான பழக்கம்

பொறுக்க முடியாத

துயரம் தருகிறது

சரத்பாபுவின் புன்னகை

மரணத்தை மறக்கச் செய்கிறது என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்