வலியால் கதறி அழுத ஷாலினி! குற்ற உணர்ச்சியில் மூழ்கிய அஜித்...! விபத்தில் தொடங்கிய ஒரு காதல் கதை....!

ஷாலினி படிப்பில் கவனம் செலுத்த விரும்பியதால் அந்த வாய்ப்பை நிராகரித்தார். நடிகர் அஜித் தலையிட்டு, படப்பிடிப்பால் அவரது படிப்புக்கு இடையூறு ஏற்படாது என உறுதியளித்தார்.;

Update:2023-04-25 12:57 IST

சென்னை

நடிகர் அஜித்குமார் மற்றும் ஷாலினி தம்பதி தங்கள் 23வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். இந்த எவர்கிரீன் ஜோடிக்கு ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அஜித் - ஷாலினி. இவர்களின் காதலுக்கு அடையாளமாக அனோஷ்கா என்கிற மகளும் ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர்.

இருவரும் ஏப்ரல் 24, 2000 அன்று திருமணம் செய்துகொண்டாலும், அதற்கு முன்பே இருவரும் காதலித்து வந்தனர்.

நடிகை ஷாலினி குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர்

'அணியத்தி பிராவு' மற்றும் 'நக்ஷத்ரதரட்டு' போன்ற படங்களின் மூலம் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

'அணியத்தி பிராவு' தமிழில் காதலுக்கு மரியாதை என்ற படமாக ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் சரண், அஜித் நடிப்பில் உருவாகிய 'அமர்க்களம்' படத்திற்கு அவரி ஷாலினியை அணுகினர்.

ஷாலினி படிப்பில் கவனம் செலுத்த விரும்பியதால் அந்த வாய்ப்பை நிராகரித்தார். நடிகர் அஜித் தலையிட்டு, படப்பிடிப்பால் அவரது படிப்புக்கு இடையூறு ஏற்படாது என உறுதியளித்தார்.

இது ஒரு அழகான காதல் கதையின் இனிய ஆரம்பம். அஜித் பழைய பேட்டி ஒன்றில் இதனை கூறியிருந்தார்.

இப்படத்தில் ஒரு சண்டைக் காட்சியை படமாக்கும் போது ஷாலினியின் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது.தவறுதலாக ஷாலினியின் கை கத்தியால் வெட்டுப்பட்டது. அது ஒரு விபத்து. ஷாலினி வலியில் கதறி அழுததை பார்த்த அஜித்துக்கு குற்ற உணர்வு ஏற்பட்டது. அதுவே பின்னர் காதலுக்கு வழிவகுத்தது.

ஷாலினியின் உடல்நிலை குறித்து அஜித் மிகவும் கவலைப்பட்டார். இது ஷாலினியை மிகவும் தொட்டது.

அமர்க்களம் படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் ஷாலினியிடம் தனது காதலை வெளிப்படுத்தினார் அஜித். பயத்துடன் சொன்னார். அப்போதும் ஷாலினியின் மனதில் அஜித் இடம் பிடித்திருந்தார். ஷாலினி தான் நடித்துக்கொண்டிருக்கும் படங்களை முடித்த பிறகு திருமண வாழ்க்கையில் நுழைந்தார். இவர்களது திருமணம் ஏப்ரல் 24, 2000 அன்று நடைபெற்றது.

ஒரு பேட்டியின் போது, ஷாலினி தான் முதலில் சந்தித்ததை ஒருமுறை வெளிப்படுத்தி இருந்தார்.

திருமணம் ஆகி 23 வருடங்கள் ஆனாலும் அஜித் - ஷாலினிக்குள் காதல் என்பது. இன்னும் குறையாமல் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது.

தன்னுடைய 23 ஆம் ஆண்டு திருமணம் நாளை முன்னிட்டு... காதல் கணவர் அஜித் கன்னத்துடன் கன்னம் வைத்து, இறுக்கமாக கட்டி பிடித்து கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை ஷாலினி வெளியிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்