ஜி.வி.பிரகாஷ் படத்தின் டீசரை வெளியிடும் சூர்யா..!

அறிமுக இயக்குனர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் 'ரிபெல்'.;

Update:2023-11-10 21:52 IST

சென்னை,

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். இந்த படத்திற்கு 'ரிபெல்' (Rebel) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்குகிறார். இந்த படத்தில் மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி, ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'ரிபெல்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், 'ரிபெல்' படத்தின் டீசர் வெளியீடு குறித்த புதிய தகவலை படக்குழு வெளியிட்டு உள்ளது. அதன்படி 'ரிபெல்' படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 'ரிபெல்' படத்தின் டீசர் நாளை (நவம்பர் 11) மாலை 5.00 மணிக்கு வெளியாக இருக்கிறது.


Tags:    

மேலும் செய்திகள்