சம்பளத்தை திருப்பிக் கொடுத்த நடிகர்

தமிழில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து சவுந்தரராஜா பிரபல நடிகராக உயர்ந்துள்ளார்.;

Update:2023-09-22 09:49 IST

தமிழில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபல நடிகராக உயர்ந்துள்ள சவுந்தரராஜா, `சுந்தரபாண்டியன்', `ஜிகர்தண்டா', `தர்மதுரை', `பிகில்', `ஜெகமே தந்திரம்' உள்பட 35-க் கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

விக்ரம் பிரபுவுடன் நடித்துள்ள `ரெய்டு' படம் திரைக்கு வர உள்ளது. ஜி.வி.பிரகாசுடன் `இடிமுழக்கம்', `சாயாவனம்' உள்பட 6 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். `கட்டிங் கேங்க்' என்ற மலையாளப் படத்தில் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் திரைக்கு வந்த `துடிக்கும் கரங்கள்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள சவுந்தரராஜாவின் கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன.

இந்தப் படம் கொரோனா கஷ்டங்களுக்கு மத்தியில் தயாராகி வெளிவந்துள்ளது. இதையடுத்து தயாரிப்பாளருக்கு உதவும் வகையில் தனக்கு வழங்கிய முழு சம்பளத்தையும் சவுந்தரராஜா திருப்பிக் கொடுத்து விட்டார். அவரது செயலை படக்குழுவினர் பாராட்டி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்