காதல் வதந்திக்கு நடிகை விளக்கம்

ஊர்வசி ரவுத்தலா இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை காதலிப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவி விமர்சனத்துக்கு உள்ளானார். இதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.;

Update:2022-12-04 11:41 IST

தமிழில் 'தி லெஜண்ட்' படத்தில் நடித்தவர் ஊர்வசி ரவுத்தலா. இந்தியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது தெலுங்கில் ராம் பொத்தினேனியுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் ஊர்வசி ரவுத்தலா இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை காதலிப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவி விமர்சனத்துக்கு உள்ளானார். பலரும் அவரை கேலி மற்றும் அவதூறு செய்து வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டனர். இதற்கு ஊர்வசி ரவுத்தலா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ''ஆர்பி என்று ராம் பொத்தினேனியை நான் குறிப்பிட்டேன். ஆனால் ரிஷப் பண்டை தான் அப்படி அழைத்தேன் என்று பலரும் யூகமான வதந்திகளை பரப்பி என்னை கேலி செய்கிறார்கள். எதையும் முழுமையாக விசாரிக்காமல் நம்பிவிடும் போக்கு சரியல்ல. கிரிக்கெட் வீரர்களோடு நடிகர், நடிகைகளை ஒப்பிடுவது முறையல்ல. அவர்கள் நாட்டுக்காக விளையாடுவதால் மதிக்கப்படுகின்றனர்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்