விஜய் சேதுபதி நடித்துள்ள 'மகாராஜா' படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

அஜித்தின் விடாமுயற்சி, கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட படங்களின் உரிமையையும் நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Update: 2024-01-17 08:03 GMT

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் 50-வது படமான 'மகாராஜா' திரைப்படத்தை 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். இப்படத்தில் நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் தி ரூட் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. நேற்று விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'மகாராஜா' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது. 'மகாராஜா' திரைக்கு வந்த பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 'மகாராஜா' திரைப்படம் வெளியாகிறது.

அஜித்தின் விடாமுயற்சி, கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட படங்களின் உரிமையையும் நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்