இணையதளத்தில் வைரலாகும் 'சப்தம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

'சப்தம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Update: 2023-12-14 12:34 GMT

சென்னை,

இயக்குநர் அறிவழகன் கடைசியாக அருண் விஜய் நடிப்பில் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப்சீரிஸை இயக்கியிருந்தார். இதைதொடர்ந்து 7ஜி பிலிம்ஸ் சிவா தயாரிப்பில் இயக்குநர் அறிவழகனின் இயக்கத்தில் நடிகர் ஆதி கதாநாயகனாக சப்தம் படத்தில் நடித்து வருகிறார். இதன் மூலம் இயக்குநர் அறிவழகனின் முதல் படமான ஈரம் படத்துக்கு பின்னர் 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆதியுடன் கூட்டணி அமைத்துள்ளார். மேலும் ஈரம், வல்லினம், ஆறாது சினம் என தொடர்ந்து மூன்று படங்களில் அறிவழகனுடன் பணியாற்றிய இசையமைப்பாளர் தமனும், இந்த படத்தில் அவருடன் மீண்டும் கைகோர்த்துள்ளார்.

ஈரம் படத்தை போலவே இந்த படமும் சஸ்பென்ஸ், திகில் பாணியில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் டிசம்பர் 14ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் 'ஆல்பா ப்ரேம்ஸ்' சார்பில் இணைந்து தயாரிக்கும் 'சப்தம்' திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் ஆதியுடன் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தமிழில் சமீப காலமாக திகில் படங்களில் வருகை குறைவாக இருந்த நிலையில், சப்தம் திரைப்படம் திகில், சஸ்பென்ஸ் படமாக ரசிகர்களை மிரட்டவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்