'ரத்னம்' படத்தின் டிரெய்லர் - அறிவிப்பு வெளியிட்ட படக்குழு

விஷால் நடித்துள்ள 'ரத்னம்' படத்தின் டிரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Update: 2024-04-14 13:07 GMT

சென்னை,

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ரத்னம்'. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் கவுதம் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தை இந்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன.

இந்நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரத்னம் படத்தின் டிரெய்லர் குறித்து படக்குழு போஸ்டர் வெளியிட்டு அப்டேட் கொடுத்துள்ளது. அதன்படி ரத்னம் படத்தின் டிரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்