விஜய் சேதுபதி-கேத்ரீனா கைப் நடிக்கும் 'மெரி கிறிஸ்துமஸ்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.;

Update:2022-12-24 20:15 IST

Image Courtesy : @VijaySethuOffl twitter

சென்னை,

இந்தியில் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கிய 'அந்தாதூன்' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது ஸ்ரீராம் ராகவன் அடுத்ததாக விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்திற்கு 'மெரி கிறிஸ்துமஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இப்படம் டிசம்பர் மாத இறுதியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் தொழில் நுட்ப பணிகள் முடியாததாலும், திட்டமிட்ட தேதியில் வேறு படங்கள் திரைக்கு வருவதாலும் படத்தின் ரிலீசை தள்ளிவைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படம் 2023-ஆம் ஆண்டு தமிழ் மற்றும் இந்தியில் வெளியாகும் என அந்த போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு கண்ணாடி கோப்பைகள் முட்டிக்கொண்டு உடைவது போல் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்