மாறுபட்ட தோற்றத்தில் தங்கர்பச்சான்!

டைரக்டர் தங்கர்பச்சான் சில வருட இடைவெளிக்குப்பின், ‘யங் மங் சங்’ என்ற படத்தில் நடிக்கிறார்.

Update: 2017-03-23 21:30 GMT
‘சிதம்பரத்தில் அப்பாசாமி,’ ‘பள்ளிக்கூடம்,’ ‘அம்மாவின் கைப்பேசி’ ஆகிய படங்களில் நடித்த டைரக்டர் தங்கர்பச்சான் சில வருட இடைவெளிக்குப்பின், ‘யங் மங் சங்’ என்ற படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு அப்பா வேடம். பிரபுதேவாவின் தந்தையாக நடிக்கிறார். இதற்காக அவருடைய சிகை அலங்காரம் மாற்றப்பட்டு இருக்கிறது.

‘யங் மங் சங்,’ ஒரு நகைச்சுவை படம். புதுமுக டைரக்டர் அர்ஜுன் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு  கும்பகோணத்தில் நடக்கிறது!

மேலும் செய்திகள்