இனிமேல் வருடத்துக்கு 2 படங்களில் நடிப்பேன்

சிவகார்த்திகேயன் 2012-ல் மெரினா படத்தில் அறிமுகமாகி தற்போது முன்னணி கதாநாயகனாக இருக்கிறார்.

Update: 2017-10-23 07:31 GMT
அவர் ஏற்கனவே நடித்த எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை, ரஜினி முருகன் உள்ளிட்ட படங்கள் வசூல் சாதனைகளை நிகழ்த்தின. ரெமோ படத்தில் பெண் வேடத்தில் நடித்த கதாபாத்திரம் பேசப்பட்டது.

தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கும் வேலைக்காரன் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. சிவகார்த்திகேயன் வருடத்துக்கு ஒரு படத்தில் மட்டுமே நடிக்கிறார் என்று ரசிகர்கள் பலர் குறைப்பட்டனர். இனிமேல் அப்படி இல்லாமல் ஆறு மாதத்துக்கு ஒரு படம் என்று வருடத்துக்கு இரண்டு படங்களில் நடிப்பேன் என்று அவர் அறிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்