அஜித்குமாரின் 58-வது படம்

அஜித்குமார் வருடத்துக்கு ஒரு படத்தில் நடிக்கிறார். அவரது விவேகம் படம் கடந்த ஆகஸ்டு மாதம் திரைக்கு வந்தது.

Update: 2017-10-23 07:51 GMT
 படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்தில் அடிபட்டதால் சமீபத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது குணமடைந்து ஓய்வெடுத்து வரும் அஜித் தனது அடுத்த படத்துக்கு தயாராகிறார். அஜித்குமாரிடம் பல இயக்குனர்கள் கதை சொல்ல காத்து இருக்கின்றனர்.

யாருடையை இயக்கத்தில் அவர் நடிப்பார் என்ற பர பரப்பான எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் தற்போது சிவா பெயர் அடிபடுகிறது. அஜித்குமாரின் முந்தைய படங்களான வீரம், வேதாளம், விவேகம் படங்களை சிவாதான் இயக்கி இருந்தார். நான்காவது முறையாக இருவரும் மீண்டும் இணைகிறார்கள். இது அஜித்குமாருக்கு 58-வது படமாகும். இந்த படம் போலீஸ் கதை என்ற தகவல் கசிந்துள்ளது. இதில் வழக்கமான ‘சால்ட் அண்ட் பெப்பர்’ இல்லாமல் பழைய இளமையான தோற்றத்தில் அஜித் நடிக்கப்போகிறாராம்.

மேலும் செய்திகள்