போலீஸ் பாதுகாப்புடன் நயன்தாரா படப்பிடிப்பு!

சிவகார்த்திகேயன்–நயன்தாரா ஜோடியாக நடிக்கும் ‘வேலைக்காரன்’ படத்தின் படப்பிடிப்பு, ராஜஸ்தானில் நடைபெற்றது.

Update: 2017-11-02 22:30 GMT
சிவகார்த்திகேயன்–நயன்தாரா ஜோடியாக நடிக்கும் ‘வேலைக்காரன்’ படத்தின் படப்பிடிப்பு, ராஜஸ்தானில் நடைபெற்றது. டான்ஸ் மாஸ்டர் பிருந்தா நடனம் அமைத்தார். 150 நடன கலைஞர்கள் பங்கேற்றனர்.

இந்த பாடல் காட்சிக்காக, அங்கே மிக பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு, அதில் படப்பிடிப்பு நடைபெற்றது. ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தனியார் பாதுகாப்பு படையினர் 200 பேர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்!

மேலும் செய்திகள்