மாறுபட்ட கதையம்சத்துடன் விஜய் நடிக்கும் 63-வது படம்

‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய், இதுவரை 62 படங்களில் நடித்து இருக்கிறார். இவருடைய 62-வது படம், ‘சர்கார்.’

Update: 2019-01-31 11:35 GMT
‘சர்கார்’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்திருந்தார். இதையடுத்து விஜய்யின் 63-வது படத்தை அட்லீ டைரக்டு செய்கிறார். இவர் ஏற்கனவே விஜய்யை வைத்து, ‘தெறி,’ ‘மெர்சல்’ ஆகிய 2 படங்களை டைரக்டு செய்து இருக்கிறார். மூன்றாவதாக இவர் டைரக்‌ஷனில் விஜய் நடிக்கும் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

ஏ.ஜி.எஸ். நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகிய மூவரும் தயாரிக்கிறார்கள். படத்துக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். உதயா, ‘மெர்சல்,’ ‘சர்கார்’ ஆகிய 3 படங்களை தொடர்ந்து விஜய் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் 4-வது முறையாக இசையமைக்கிறார்.

விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி நடிகர்-நடிகைகள் பலர் நடிக்கிறார்கள். இதுவரை வெளிவந்த விஜய் படங்களில் இருந்து மாறுபட்ட கதையம்சம் கொண்டதாக இந்த படம் இருக்கும் என்று படக்குழுவினர் கூறுகிறார்கள். படத்துக்காக, சென்னை மீனம்பாக்கம் பின்னி மில்லில் குடிசைப்பகுதி போன்ற அரங்கு அமைத்து, படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். வில்லன் ஆட்களுடன் விஜய் மோதுகின்ற சண்டை காட்சி, அங்கு படமாக்கப்பட்டது.

மேலும் செய்திகள்