ஹிருத்திக் ரோஷனின் சம்பளம்

ஹிருத்திக் ரோஷனுக்கு படத்தின் வருமானத்தில் 40 சதவீதம் சம்பளமாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

Update: 2019-10-25 10:21 GMT
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். இவரது நடிப்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியான திரைப்படம் ‘வார்.’ இந்தியில் மட்டுமின்றி, தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் இந்தப் படம் டப் செய்து வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு நிகரான கதாபாத்திரத்தில் டைகர் ஷெராப் நடித்திருந்தார். அதிரடி ஆக்‌ஷனுடன், பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருந்த ‘வார்’ படத்தின் டிரைலரே, வெகுவான ரசிகர்களை கவர்ந்திருந்தது. இதனால் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். அதன்படியே அதிரி புதிரி வெற்றியைப் பெற்றிருக்கிறது ‘வார்’ திரைப்படம். இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த படமாகவும் பாலிவுட்டில் இந்தப் படம் மாறியிருக்கிறது. படம் வெளியான 15 நாட்களிலேயே ரூ.300 கோடியை தாண்டியிருக்கிறது. இந்தப் படத்தில் நடித்ததற்காக ஹிருத்திக் ரோஷனுக்கு படத்தின் வருமானத்தில் 40 சதவீதம் சம்பளமாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது. படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.170 கோடி. இதுவரை படத்தின் தியேட்டர் உரிமை, டிஜிட்டல் உரிமை, சாட்டிலைட் உரிமை, இன்னும் சில உரிமைகள் என ரூ.350 கோடிக்கும் மேல் வருவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறுகிறார்கள். இதை வைத்துப் பார்க்கும் போது, ‘வார்’ படத்திற்கு ஹிருத்திக் ரோஷனின் சம்பளமாக எப்படியும் ரூ.100 கோடியாவது போய் சேரும் என்று வாய் பிளக்கிறார்கள், பாலிவுட் வட்டாரத்தினர். படத்தின் வருமானத்தில் பங்கு கேட்பதுதான் இப்போது பல முன்னணி நடிகர் களின் பாணியாக இருக்கிறது.

மேலும் செய்திகள்