‘பதி’ நடிகரின் சம்பளம், ரூ.12 கோடி!

‘பதி’ நடிகர் வரிசையாக வெற்றி படங்களை கொடுத்தாலும், தனது சம்பளத்தை உயர்த்தாமல், ரூ.3 கோடி மட்டும் வாங்கி வந்தார்.

Update: 2019-11-21 10:41 GMT
சொந்த பட தயாரிப்புக்கு பின்னர் ரூ.3 கோடியாக இருந்த சம்பளத்தை ரூ.8 கோடியாக உயர்த்தினார். மூன்றெழுத்து நாயகனுக்கு வில்லனாக நடிக்க இவர் ரூ.10 கோடி கேட்டாராம். அவர் கேட்ட சம்பளத்தை பட நிறுவனம் கொடுத்து விட்டது.

இந்த நிலையில், ‘பதி’ நடிகரை வைத்து ஒரு பெரிய பட அதிபர் படம் தயாரிக்க விரும்பினார். அவரிடம், ரூ.12 கோடி சம்பளம் கேட்டாராம், ‘பதி!’ (‘மார்க்கெட்’ இருக்கும்போதே பிழைக்க தெரிந்த நடிகர் என்று சக நடிகர் ஒருவர் ‘பதி’யை பாராட்டுகிறார்!)

மேலும் செய்திகள்