தொடர் தோல்வியில் விஜய் தேவரகொண்டா

தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்து வருபவர் விஜய்தேவரகொண்டா. ‘பெல்லி சூப்லு’ திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகனாக மாறிய இவர், ‘அர்ஜூன்ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.

Update: 2020-02-21 03:00 GMT
‘அர்ஜூன்ரெட்டி’  படம் அடைந்த அதிரி புதிரி வெற்றியால், தமிழ், இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியில் மிகப்பெரிய வசூலை அந்தப் படம் எட்டியது. 

‘அர்ஜூன்ரெட்டி’ திரைப்படத்திற்குப் பிறகு ‘கீதா கோவிந்தம்’ படம் விஜய் தேவரகொண்டாவை, பெண் ரசிகர்கள் அதிகம் உள்ளவராக மாற்றியது. கடந்த ஓரிரு ஆண்டுகளில் அவர் நடிப்பில் வெளியான நோட்டா, டாக்சி வாலா, டியர் காம்ரேட் ஆகிய படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன. 

இந்த நிலையில் காதலர் தினத்தை ஒட்டி வெளியான ‘வேல்ட் பேமஸ் லவ்வர்’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறி இருக்கிறது. இந்தப் படம் வெளியான சில மணி நேரங்களிலேயே, ‘அர்ஜூன்ரெட்டி’ சாயலிலேயே இந்தப் படத்திலும் விஜய் தேவரகொண்டா நடித்திருப்பதாக ரசிகர்கள் வலைதளங்களில் பதிவிட்டனர். அதன்படியே படத்தில் அவர் நடிப்பு இருப்பதால் இந்தப் படமும் தோல்விப் படமாகவே மாறியிருக்கிறது.

மேலும் செய்திகள்