தாவர ஆராய்ச்சிக்காக காட்டுக்குள் சென்ற நண்பர்களின் கதை

தாவர ஆராய்ச்சிக்காக காட்டுக்குள் சென்ற நண்பர்களின் கதை.

Update: 2020-04-24 05:52 GMT
“ஒரே கல்லூரியில் படித்து வரும் நண்பர்கள் சிலர், தாவர ஆராய்ச்சிக்காக நடுக்காட்டுக்குள் போகிறார்கள். அங்கு அவர்கள் மாறுபட்ட மனிதர்கள் சிலரிடம் சிக்கிக் கொள்கிறார்கள்.

அந்த மாறுபட்ட மனிதர்கள், மாணவர்களின் உயிருக்கு குறிவைக்கிறார்கள். அவர்களிடம் இருந்து மாணவர்கள் எப்படி தப்புகிறார்கள்? என்பதை திகிலும், நகைச்சுவையும் கலந்து ‘ட்ரிப்’ படத்தில் சொல்லியிருக்கிறோம்” என்கிறார், டைரக்டர் டென்னிஸ் மஞ்சுநாத்.

படத்தைப் பற்றி இவர் மேலும் கூறுகிறார்:-

“இந்தப் படத்தில் சுனைனா, கருணா கரன், யோகிபாபு ஆகிய மூன்று பேரும் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் புதுமுகங்கள் பலரும் நடித்துள்ளனர். மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் அதுல்யா சந்திரா நடித்து இருக்கிறார். விஸ்வநாதன் தயாரிக்கிறார். தலக்கோணம் காட்டில் படப்பிடிப்பை தொடங்கினோம். கொடைக்கானல் காட்டில் படப்பிடிப்பை முடித்தோம்.

அடர்ந்த காடு என்பதால் ஒரு குறிப்பிட்ட இடம் வரை வாகனங்களில் செல்ல முடிந்தது. அதன்பிறகு 2 கிலோமீட்டர் நடந்தே சென்று படப்பிடிப்பு நடத்தினோம். கடுமையான மழை மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் போன்ற இயற்கையின் தடைகளை சமாளித்து படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்.”

மேலும் செய்திகள்