அருண் விஜய்யின் 30-வது படம்

‘முறை மாப்பிள்ளை’ படத்தில் அறிமுகமான அருண் விஜய்,

Update: 2020-05-01 05:48 GMT
சென்னை,

‘முறை மாப்பிள்ளை’ படத்தில் அறிமுகமான அருண் விஜய், இதுவரை 29 படங்களில் நடித்து இருக்கிறார். அவருடைய 30-வது படம், ‘சினம்.’ இதில் அவருக்கு ஜோடியாக பாலக் லால்வாணி நடித்து இருக்கிறார். ஜி.என்.ஆர்.குமரவேல் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்துக்காக, சென்னையில் ரூ.45 லட்சம் செலவில் பிரமாண்டமான ஒரு அரங்கு அமைக்கப்பட்டது. அதில், மிக பயங்கரமான ஒரு சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அருண் விஜய், ‘டூப்’ இல்லாமல் சண்டை போட்டார். சண்டை காட்சிகளை, ஸ்டண்ட் சில்வா மாஸ்டர் அமைத்து இருந்தார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்தார்.

படப்பிடிப்பு சென்னை நகரிலும், சுற்று வட்டாரங்களிலும் நடைபெற்றது. படத்தொகுப்பு, குரல் சேர்ப்பு, பின்னணி இசை சேர்ப்பு ஆகிய பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மேலும் செய்திகள்