60 வயது நடிகருக்கு ஜோடியான சாயிஷா

60 வயது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்க சாயிஷா ஒப்பந்தமாகி உள்ளார்.

Update: 2020-11-12 23:37 GMT

தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சாயிஷா. இவரும் நடிகர் ஆர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சாயிஷாவுக்கு 23 வயது ஆகிறது. தற்போது 60 வயது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்க சாயிஷா ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை போயபதி ஸ்ரீனு இயக்குகிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. கதாநாயகி இல்லாமலேயே ஐதராபாத்தில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்தனர். பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்க தமிழில் பிசாசு படத்தில் நடித்து பிரபலமான பிரயாகா மார்ட்டினை கதாநாயகியாக ஏற்கனவே ஒப்பந்தம் செய்து இருந்தனர். ஆனால் இருவரையும் வைத்து புகைப்படம் எடுத்து பார்த்தபோது ஜோடி பொருத்தம் திருப்தியாக இல்லை என்று படக்குழுவினர் கருதினர். இதையடுத்து பிரயாகாவை நீக்கி விட்டு வேறு கதாநாயகி தேடி வந்த நிலையில் சாயிஷா தேர்வாகி உள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் மீண்டும் தொடங்குகிறது.

மேலும் செய்திகள்