டிஜிட்டலில் வெளியாகும் சிவாஜியின் வியட்நாம் வீடு

பழைய சிவாஜி கணேசன் படங்களை டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கு மாற்றி திரையிட்டு வருகிறார்கள்.

Update: 2020-12-16 22:45 GMT
முதன் முதலில் 2012-ல் கர்ணன் படத்தை டிஜிட்டலில் வெளியிட்டனர். அந்த படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. சென்னையில் ஒரே தியேட்டரில் 150 நாட்கள் ஓடி திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது. தொடர்ந்து சிவாஜி நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன், திருவிளையாடல், பாசமலர், சிவகாமியின் செல்வன், வசந்த மாளிகை ஆகிய படங்களையும் டிஜிட்டலில் வெளியிட்டனர்.

இந்த வரிசையில் மாதவன் இயக்கத்தில் 1970-ல் திரைக்கு வந்த வியட்நாம் வீடு படத்தையும் பிலிமில் இருந்து டிஜிட்டலுக்கு மாற்றி அடுத்த மாதம் முதல் வாரத்தில் திரைக்கு கொண்டு வருகின்றனர். வியட்நாம் வீடு ஆரம்பத்தில் சிவாஜி கணேசன் டி.சகுந்தலா நடிக்க 125 இடங்களில் நாடகமாக நடத்தப்பட்டு பின்னர் திரைப்படமானது. சிவாஜி ஜோடியாக சகுந்தலா கதாபாத்திரத்தில் பத்மினி நடித்து இருந்தார். படத்தில் இடம்பெற்ற உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி, பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா போன்ற பாடல்கள் இப்போதும் பட்டி தொட்டியெங்கும் ஒலிக்கின்றன.

மேலும் செய்திகள்