கார் மோதி பிரபல நடிகர் காயம்

பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

Update: 2021-09-12 16:11 GMT
பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். விபத்துக்குள்ளான நடிகரின் பெயர் சாய் தரம் தேஜ். இவர் பிரபல நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண் ஆகியோரின் நெருங்கிய உறவினர் ஆவார்.

இவர் ஐதராபாத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, வெளிநாட்டு ஆடம்பர கார் ஒன்று அவரை உரசி சென்றது. இதன் காரணமாக அவர் தடுமாறி கீழே விழுந்தார். கை, இடுப்பு, முகம் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. ஹெல்மெட் அணிந்திருந்ததால் தலையில் காயம் எதுவுமில்லை. அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல்சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு வந்து உடல்நலம் விசாரித்தனர்.

தற்போது அவர் உடல்நலம் தேறி வருவதாக கூறப்படுகிறது. சாய் தரம் தேஜின் உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்