மணிரத்னம் மீது இயக்குனர் பொன்ராம் அதிருப்தி

நவரசாவில் இருந்து தன் படம் வெளியேற்றப்பட்டதற்கு மணிரத்னம் சொன்ன காரணம் திருப்திகரமாக இல்லை என இயக்குனர் பொன்ராம் தெரிவித்துள்ளார்.

Update: 2021-11-08 16:47 GMT
ஆந்தாலஜி என்று அழைக்கப்படும் கூட்டுப்படங்கள் தயாரிக்கும் முறை இப்போது நடைமுறையில் இருக்கிறது. சமீபகாலத்தில் இப்படியான படங்களின் வருகையை ஓ.டி.டி. தளங்கள் வரவேற்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு மணிரத்னம், ஜெயேந்திர இருவரும் இணைந்து நவரசா என்ற பெயரில் ஒன்பது சுவைகளைப் படமாக்கினர்.  

ஒவ்வொரு இயக்குனரும் ஒரு படத்தை இயக்கியிருந்தனர். அதில் இயக்குனர் பொன்ராம் இயக்கிய ஒரு படம் இருந்தது. அதை மணிரத்னம் விலக்கியிருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளிவந்திருக்கிறது. இதை இயக்குனர் பொன்ராம் ரசிகர்களுடன் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியிருக்கிறார்.  

இது பற்றி பொன்ராம் கூறும்போது, “நவரசா ஆந்தாலஜியில் என் படம் வெளியேற்றப்பட்டது ஏமாற்றமளிக்கிறது. உண்மையான காரணம் என்னவென்று தயாரிப்பாளர்களுக்குத்தான் தெரியும். படத்தின் ஒலியில் பிரச்சினை இருப்பதாக மணி சார் சொன்னார்.

ஆனால், அந்த விளக்கம் எனக்குத் திருப்திகரமாக இல்லை.  எங்கள் படம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. அதில் சம்பந்தப்பட்ட அனைவருமே உண்மையாக உழைத்தோம். ஆனால், கடைசியில் மனமுடைந்து போனோம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தக்கதையில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடித்திருந்தார்.

மேலும் செய்திகள்