நடிகை பலாத்கார வழக்கு: காவ்யா மாதவன் வங்கி லாக்கரில் அதிரடி சோதனை

பிரபல நடிகை காரில் பலாத்கார வழக்கில் காவ்யா மாதவனிடம் போலீசார் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.

Update: 2022-05-12 16:48 GMT
கேரளாவில் ஓடும் காரில் பிரபல நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர் வழக்கின் சாட்சியங்களை மிரட்டியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக போலீசார் நடிகர் திலீப் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அவரது 2வது மனைவி நடிகை காவ்யா மாதவனுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதால் அவரிடமும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் போலீசாரின் பல கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று நடிகை காவ்யா மாதவனின் வங்கி லாக்கர்களில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். காலை முதல் மாலை வரை இந்த சோதனை நடந்தது. இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக நடிகை காவ்யா மாதவனிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்