'ஒருவர் நல்லவர், இன்னொருவர் கெட்டவர்'.. தனுஷ் வெளியிட்ட அப்டேட்..

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் 'நானே வருவேன்'. 'நானே வருவேன்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

Update: 2022-09-07 17:14 GMT
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'நானே வருவேன்' திரைப்படத்தின் முதல் பாடல் வருகிற செப்டம்பர் 7-ஆம் தேதி மாலை 4.40 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதனை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் தனுஷ், "ஒரே ஒரு ஊருக்குள்ளே, இரண்டு ராஜா இருந்தாராம்... ஒரு ராஜா நல்லவராம், இன்னொரு ராஜா கெட்டவராம்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த மாதம் இறுதிக்குள் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்