தொடர்ந்து வரவேற்பை பெறும் 'வாரிசு' பட பாடல்.. குஷியில் ரசிகர்கள்..

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘வாரிசு’. இப்படம் வெளியாகிய 11 நாட்களில் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Update: 2023-01-25 17:06 GMT

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

'வாரிசு' படத்தின் 'ரஞ்சிதமே', 'தீ தளபதி', 'சோல் ஆஃப் வாரிசு' போன்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று பார்வையாளர்களை குவித்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் 'தீ தளபதி' பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. வாரிசு படம் வெளியாகிய 11 நாட்களில் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்