டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்து அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்கு

பாகிஸ்தான் அணி ஸ்காட்லாந்துக்கு 190 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

Update: 2021-11-07 15:43 GMT
சார்ஜா,

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்12 சுற்றில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தான்- ஸ்காட்லாந்து அணிகள் மோதின. 

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான முகம்மது ரிஸ்வானும், பாபர் அசாமும் களமிறங்கினர். ரிஸ்வான் 15 ரன்களில் வெளியேறினார். பாபர் வழக்கம்போல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 66 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

இறுதியில் ஹபீஸ் மற்றும் மாலிக் அதிரடி காட்ட, பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. மாலிக் 18 பந்துகளில் ஒரு பவுண்டரி, 6 சிக்சருடன் 54 ரன்களை விளாசினார். ஸ்காட்லாந்து தரப்பில் கிறிஸ் க்ரீவ்ஸ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி களமிறங்க உள்ளது.

மேலும் செய்திகள்