இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: போராடி டிரா செய்த வெஸ்ட் இண்டீஸ்

இரு அணிகளுக்கும் இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

Update: 2022-03-20 23:07 GMT
பிரிட்ஜ்டவுன்,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரூகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது,

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி, கேப்டன் ஜோ ரூட் 153 ரன்கள் குவித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த லாரன்ஸ்சின் 91 ரன்கள் மற்றும் பென் ஸ்டோக்ஸ்சின் அதிரடி சதம் ஆகியோரின் பங்களிப்பில் 150.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 507 ரன்கள் குவித்த நிலையில், டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. 

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது. அந்த அணியிதொடக்க ஆட்டக்காரரான கேப்டன் பிராத்வெயிட் மற்றும் ஜெர்மைன் பிளாக்வுட் ஆகியோரின் சதத்தால், அந்த அணி 187.5 ஓவர்களில் 411 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. 

இதையடுத்து தனது இரண்டாம் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி ஆட்டத்தின் கடைசி நாளான இன்று 39.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அதன்படி வெஸ்ட் இண்டீசுக்கு 282 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

அதன்படி 282 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்தில் ஒருசில விக்கெட்டுகளை இழந்து திணறியது. எனினும், கேப்டன் கிரேக் பிராத்வெயிட் பொறுப்புடன் நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார். 

வெஸ்ட்  இண்டீஸ் அணி 65 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தபோது, கடைசி நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததால், இரு அணிகளுக்கிடையே முடிவு கிட்டாமல் ஆட்டம் டிராவில் முடிந்தது. இரு இன்னிங்ஸ்களிலும் சிறப்பான போட்டிங்கை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிரேக் பிராத்வெயிட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


மேலும் செய்திகள்