ஐபிஎல் கிரிக்கெட் : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி திணறல்

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி திணறி வருகிறது.

Update: 2022-04-04 14:51 GMT
Image Courtesy : @IPL
மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கடந்த மாதம் 15-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைப்பெற்று வரும் போட்டியில் ஐதராபாத் - லக்னோ அணிகள் மோதி வருகின்றன.

டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் வில்லியம்சன் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி  லக்னோ அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது.

தொடக்க வீரராக களமிறங்கிய டி காக் 1 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் வெளியேறினார். அதை தொடர்ந்து வந்த லீவிசும் ஒரே ரன்னில் மீண்டும் சுந்தர் சூழலில் சிக்கினார்.

அனுபவ வீரர் மனிஷ் பாண்டே 11 ரன்களில் வெளியேற அணி லக்னோ தடுமாறி வருகிறது. தற்போது  வரை அந்த அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு  68 ரன்கள் எடுத்துள்ளது. 

மேலும் செய்திகள்