முதல் போட்டியிலே டெவால்ட் பிரிவிஸ் அடித்த "நோ லுக் சிக்சர்" - வைரல் வீடியோ

மும்பை அணியின் இளம் வீரர் டெவால்ட் பிரிவிஸ்சின் "நோ லுக் சிக்சர்" இணையத்தில் வைரலாகி வருகிறது.

Update: 2022-04-07 11:28 GMT
Image Courtesy : @IPL/ BCCI
மும்பை,

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 161 ரன்கள் எடுத்தது. 162 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் பின்னர் கம்மின்ஸ் அதிரடியால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் மும்பை அணிக்காக முதல் போட்டியில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் டெவால்ட் பிரிவிஸ் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சமீபத்தில் நடந்துமுடிந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற பெருமையை பெற்ற இவர் கிரிக்கெட் உலகின் அடுத்த ஏபி டி வில்லியர்ஸ் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி வீசிய 8-வது ஓவரின் முதல் பந்திலே டெவால்ட் பிரிவிஸ் இமாலய சிக்சர் ஒன்றை விளாசினார். பந்தை அடித்த அவர் அது எங்கே செல்கிறது என பார்க்கவில்லை. கிரிக்கெட் அரங்கில் இது "நோ லுக் சிக்சர்" என அழைக்கப்படுகிறது.

அவரின் இந்த "நோ லுக் சிக்சர்"  தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி வருகிறது.

மேலும் செய்திகள்