ஐபிஎல் : டோனியிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன் - பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்

சென்னை அணி உடனான தனது பயணம் குறித்தும் டு பிளெசிஸ் பேசினார்;

Update:2022-04-12 18:24 IST
Image Courtesy : RCB Twitter

கடந்த ஆண்டு வரை  ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய டு பிளெஸ்சிஸ் தற்போது பெங்களூரு அணியின் கேப்டனாக செயல்பட்டு 
வருகிறார் .

இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ‘இன்சைட் ஆர்சிபி’ நிகழ்ச்சியில்   சென்னை அணி  உடனான தனது பயணம் குறித்தும்  டு பிளெசிஸ் பேசினார் ;

அவர் கூறியதாவது ;

10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களுடன் இருந்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர்களுக்கு என் இதயத்தில் தனி இடம் உண்டு, டோனியிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன், அவர் ஒரு அருமையான கேப்டன், எனவே இந்திய கிரிக்கெட்டில் இரண்டு பெரிய கேப்டன்களிடம்  இருந்து கற்றுக்கொள்ளும் நிலையில் நான் அமர்ந்திருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார் 

மேலும் செய்திகள்