ஐபிஎல் : மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் மயங்க் அகர்வால் அதிரடி அரைசதம்..!

இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை -பஞ்சாப் அணிகள் மோதுகின்றன .

Update: 2022-04-13 15:05 GMT
Image Courtesy : IPL
மும்பை,

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை -பஞ்சாப் அணிகள் மோதுகின்றன .

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை  தேர்வு செய்துள்ளது .அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்யதது.

பஞ்சாப் அணி தொடக்க வீரர்களாக தவான் ,மயங்க் அகர்வால் களமிறங்கினர் .தொடக்கம் முதல் ,மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர் .பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்டனர்.

அதிரடியாக விளையாடிய இருவரும் பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் சேர்த்தனர்  .சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் அரை சதம் அடித்து அசத்தினார் .தொடர்ந்து விளையாடிய அவர் 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் 

மேலும் செய்திகள்