டி20 உலகக்கோப்பை; ரிச்சி பெரிங்டன் தலைமையில் களம் இறங்கும் ஸ்காட்லாந்து அணி

டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஸ்காட்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-06 13:15 GMT

Image Courtesy: @ICC

எடின்பர்க்,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை அறிவித்து வருகின்றன.

ஏற்கெனவே நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஓமன், அமெரிக்கா, உகாண்டா போன்ற நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன.

இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க உள்ள ஸ்காட்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அந்த அணிக்கு ரிச்சி பெரிங்டன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்காட்லாந்து அணி விவரம்; ரிச்சி பெரிங்டன் (கேப்டன்), மேத்யூ கிராஸ், பிராட் கியூரி, கிறிஸ் க்ரீவ்ஸ், ஒலி ஹேர்ஸ், ஜாக் ஜார்விஸ், மைக்கேல் ஜோன்ஸ், மைக்கேல் லீஸ்க், பிராண்டன் மெக்முல்லன், ஜார்ஜ் முன்சி, சப்யான் ஷெரீப், கிறிஸ் சோல், சார்லி டியர், மார்க் வாட், பிராட் வீல்.



Tags:    

மேலும் செய்திகள்