"சூப்பர் மார்கெட்டிற்கு சென்று அவரின் வேகத்தை வாங்க முடியாது"- உம்ரன் மாலிக்கை புகழ்ந்த இயன் பிஷப்

முன்னாள் கிரிக்கெட் வீரர் இயன் பிஷப், உம்ரன் மாலிக்கை பாராட்டியுள்ளார்

Update: 2022-04-19 12:35 GMT
Image Courtesy : BCCI / IPL
மும்பை,

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரன் மாலிக். இவர் தொடர்ந்து 150 கி.மீ வேகத்தில் பந்து வீசுவதால் , அனைவரின்  கவனத்தையும் ஈர்த்துள்ளார் .

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஹைதராபாத் அணியின் முந்தைய போட்டியில் ,இன்னிங்ஸின் இறுதி ஓவரில் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார் உம்ரன் மாலிக் .

இவருக்கு பல்வேறு கிரிக்கெட் ஜாம்பவான்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர்  இயன் பிஷப்  உம்ரன் மாலிக்கை பாராட்டியுள்ளார்.

உம்ரன் மாலிக் குறித்து அவர் கூறுகையில், " கடந்த ஆண்டு அவர் பந்து வீசியதைப் பார்த்ததில் இருந்து நான் இந்தமுறை அவர் பந்துவீசுவதை பார்க்க ஆர்வமாக இருந்தேன். 

இந்த வேகத்தை  நீங்கள் ஒரு சூப்பர் மார்கெட்டிற்கு சென்று வாங்க முடியாது. நீங்கள் ஒருவருக்கு லைன் மற்றும் லென்த் பற்றி பயிற்சி கொடுக்கலாம். ஆனால் வேகமாக பந்து வீசுவது எப்படி என்று ஒருவருக்குக் கற்றுக் கொடுக்க முடியாது."

சிறந்த பேட்ஸ்மேன்கள் கூட அவரை எதிர்கொள்ள சிரமப்படுவார்கள். லாக்கி பெர்குசன் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் போலவே அவர் பலரை பயமுறுத்துகிறார். முழு உடற்தகுதியுடன் இருந்தால் அவர் இந்தியாவிற்காக விரைவில் விளையாடப் போகிறார்" என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்