நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து லட்சக்கணக்கில் அபராதம் செலுத்தும் கே எல் ராகுல்..!!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கே எல் ராகுலுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-04-25 10:51 GMT
Image Courtesy : BCCI / IPL
மும்பை,

ஐ.பி.எல். தொடரில் நேற்று  நடைபெற்ற  போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ அணிகள்  மோதின. இந்த ஆட்டத்தில் லக்னோ அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

லக்னோ அணியின் கேப்டன் ராகுல் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். அதே நேரத்தில் நடப்பு தொடரில் மும்பை அணிக்கு இது 8-வது தோல்வியாகும். 

இந்த நிலையில் நேற்று  நடந்த போட்டியில் லக்னோ அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் கேப்டன் கே எல் ராகுலுக்கு  ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் லக்னோ அணி வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அல்லது 6 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

நடப்பு தொடரில் ஏற்கனவே ஒருமுறை பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதால் கேஎல் ராகுலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு அணிக்கு எதிராண ஐபிஎல் போட்டியில் விதிமுறைகளை மீறியதாக லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

என்ன விதிமீறலுக்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது என தகவல் வெளிவரவில்லை. எனினும் தவறை கே.எல்.ராகுலே ஒப்புக்கொண்டுள்ளதால் லெவல் 1 விதிப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த தொடரில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால்  மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மாவிற்கு 2 முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்