கன்னியாகுமரி படகு துறையில் மணல் திட்டுகளை அகற்றி ஆழப்படுத்தும் பணி தொடங்கியது

கன்னியாகுமரியில் படகு துறையில் மணல் திட்டுகளை அகற்றி கடலை ஆழப்படுத்தும் பணி தொடங்கியது.;

Update:2017-07-07 04:30 IST
கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள பாறையில் விவேகானந்தர் மண்டபமும், அதன் அருகில் மற்றொரு பாறையில் 133 அடி திருவள்ளுவர் சிலையும் உள்ளது.

இந்த இடங்களை சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்ப்பதற்கு வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் பொதிகை, குகன், விவேகானந்தா என 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

கடலில் ஏற்படும் இயற்கை மாற்றங்கள் காரணமாக இந்த படகு துறையில் அடிக்கடி மணல்கள் குவிந்து திட்டுகள் போல மாறி விடும். இதன் காரணமாக படகுகளை இங்கு நிறுத்துவதில் சிரமம் ஏற்படும். இதனால் இந்த மணல் திட்டுகளை தூர்வாரி கடல் பகுதியை ஆழப்படுத்த திட்டமிடப்பட்டது.

இதற்காக நவீன எந்திரம் வரவழைக்கப்பட்டு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையை தூர்வாரி ஆழப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணி சில நாட்களில் நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்