அண்ணா நினைவு தினத்தையொட்டி தியாகராஜர் கோவிலில் பொதுவிருந்து கலெக்டர் நிர்மல்ராஜ் பங்கேற்பு

அண்ணா நினைவு தினத்தையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பொதுவிருந்து நடைபெற்றது. இதில் கலெக்டர் நிர்மல்ராஜ் கலந்து கொண்டார்.

Update: 2019-02-03 23:00 GMT
திருவாரூர்,

அண்ணா நினைவு தினத்தையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கி, பொதுவிருந்தில் கலந்து கொண்ட மக்களுக்கு உணவு பரிமாறி தொடங்கி வைத்தார். இதில் கூட்டுறவு சங்க தலைவர் மூர்த்தி, உதவி கலெக்டர் (பொறுப்பு) பால்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி கவிதா மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

இதேபோல திருவாரூர் காகிதகாரத்தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் அண்ணா நினைவு தினத்தையொட்டி பொதுவிருந்து நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிவக்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் பொதுவிருந்து நடந்தது. இதில் அறநிலைய உதவி ஆணையரும், கோவில் செயல்அலுவலருமான தமிழ்ச்செல்வி, அறநிலைய ஆய்வாளர் தமிழ்மணி, வலங்கைமான் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. துணைச்செயலாளர் இளவரசன், ஊராட்சி செயலாளர் வீரையன், கோவில் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் அண்ணா நினைவு நாளையொட்டி பொதுவிருந்து நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைதொடர்ந்து பொதுவிருந்து நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிவக்குமார், ஆய்வாளர் ரமணி, மேலாளர் சீனிவாசன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்