இலங்கை சிறையில் இருந்து ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் விடுதலை

இலங்கை சிறையில் இருந்து ராமேசுவரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

Update: 2019-04-16 22:30 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 8–ந்தேதி மீன்பிடிக்க சென்ற ஒரு படகையும், அதில் இருந்த கனிஸ்டன், முருகேசன், முனியசாமி உள்பட 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்கள் நேற்று வழக்கு விசாரணைக்காக ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நல்லெண்ண அடிப்படையில் இந்த 4 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

மேலும் படகின் உரிமையாளர் வருகிற ஜூன் 7–ந்தேதி உரிய ஆவணங்களுடன் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் எனவும், அவ்வாறு ஆஜராக தவறினால் சம்பந்தப்பட்ட படகு அரசுடைமையாக்கப்படும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

தற்போது விடுதலை செய்யப்பட்ட 4 மீனவர்கள் உள்பட 26 பேர் இலங்கையில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளின் பராமரிப்பில் உள்ளனர். இதுதவிர ராமேசுவரத்தை சேர்ந்த 12 மீனவர்களும், காரைக்காலை சேர்ந்த 18 மீனவர்களும் என மொத்தம் 30 பேர் இலங்கை சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்