அழுத்தத்தை குறைக்கும் ஹய் மோ செயலி

இந்த அவசர யுகத்தில் நின்று பேச நிதானமில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறோம்

Update: 2019-05-15 08:16 GMT
. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை டிப்ரசன் என்று சொல்லக் கூடிய மன அழுத்த பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆஸ்திரியாவை சேர்ந்த ஹய் மொமெண்ட் என்ற நிறுவனம் ஒரு செயலியின் மூலம் இந்த பிரச்சினைக்கு உதவ முன் வந்திருக்கிறது. ஹய் மோ என்ற இந்த செயலி ஐ-போன் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரண்டு இயங்குதளங்களிலும் செயல்படும்.

இந்த செயலியில் நாம் மகிழ்ச்சியாக இருந்த தருணங்களையும், நம்மை சந்தோஷமாக வைத்திருக்க கூடிய விஷயங்களையும் பதிவு செய்து விட வேண்டும். மன அழுத்தம் ஏற்படும் சூழ்நிலைகளில், இத்தகைய நல்ல தருணங்களை நினைவு படுத்துகிறது இந்த செயலி. அது மட்டுமின்றி நேர்மறையான எண்ணங்களை மனதில் எழவும் செய்கிறது. எந்த ஒரு சிக்கலான நிலையிலும், நமது பார்வையை மாற்றினால் வாழ்க்கையை மாற்ற முடியும், அதற்கு நிச்சயம் இந்த செயலி உதவும் என்று நம்பிக்கை அளிக்கின்றனர், இதன் நிறுவனர்கள். சமூக வலைதளங்களை போல் அல்லாமல் தனி நபர் குறித்த தகவல்கள் பாதுகாக்கப்படும் என்றும் உறுதியளிக்கின்றனர்.

மேலும் செய்திகள்