முதல்-மந்திரி பதவி கடையில் வாங்கும் பொருள் அல்ல மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி

முதல்-மந்திரி பதவி கடையில் வாங்கும் பொருள் அல்ல என்று மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

Update: 2019-05-16 22:45 GMT
பெங்களூரு,

நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

குந்துகோல் தொகுதியை வளர்ச்சி அடைய செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன். இடைத்தேர்தல் முடிந்த பிறகும் இந்த தொகுதியின் வளர்ச்சியில் முழு கவனம் செலுத்துவேன். வாக்காளர்கள் பா.ஜனதாவுக்கு ஓட்டுப்போட்டு தங்கள் வாக்குகளை வீணாக்க வேண்டாம். இந்த தொகுதியின் வளர்ச்சிக்கு காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும்.

எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஊடகங்கள் தான் எனக்கு பிரச்சினையை உருவாக்குகின்றன. பா.ஜனதாவினர் கீழ்மட்ட அரசியல் செய்வதை கைவிட வேண்டும். முதல்-மந்திரி பதவி கடையில் வாங்கும் பொருள் அல்ல. அடுத்த 4 ஆண்டுகள் குமாரசாமியே முதல்-மந்திரியாக நீடிப்பார். இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது:-
முதல்-மந்திரி பதவி தற்போது காலியாக இல்லை. காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு தகுதியானவர்கள் நிறைய ேபர் உள்ளனர். முதல்-மந்திரியாக குமாரசாமி இருக்கும்போது, அதுபற்றி பேசுவது தேவையற்றது.

சித்தராமையா வளையல் போட்டுக் கொள்ளட்டும் என்று ஷோபா எம்.பி. கூறியுள்ளார். இது சரியல்ல. அவர் வளையல் போட்டுள்ள பெண்களை அவமதித்துவிட்டார். அவரது கருத்து வெட்கக்கேடானது. இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.

மேலும் செய்திகள்