திருவள்ளூர் மாவட்டத்தில் - கலெக்டர் ஆய்வு

கோடை வெயில் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் வறண்டு காணப்படுகிறது.

Update: 2019-08-02 22:45 GMT
ஊத்துக்கோட்டை,

ஏரிகளுக்கு மழை நீர் வரும் பாசன கால்வாய்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் ஏரிகள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் ஏரிகளில் மழைநீர் தேங்குவது இல்லை. இதனை கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள ஏரிகளில் தூர்வாரப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 30 ஏரிகளை தூர்வார ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான தொடக்க விழா வரும் 7-ந் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார். இதற்கான இடம் தேர்வு செய்ய ஆய்வு பணி நடைபெற்றது.

ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரண்டூர், பனபாக்கம், ஆத்துபாக்கம், மஞ்சாங்காரணை போன்ற பகுதிகளில் உள்ள ஏரிகளை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு செய்தார். ஊத்துக்கோட்டை தாசில்தார் செல்வகுமார், துணை தாசில்தார் பாரதி, பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் புருத்வி பாலசுந்தரம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்