பலத்த காற்றால் தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது; மீன்பிடி தொழிலும் கடுமையாக பாதிப்பு

தொடர்ந்து வீசி வரும் பலத்த காற்றால் தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது. மீன்பிடி தொழிலும் அங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-08-09 23:00 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரம் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வருவதுடன் கடல் கொந்தளிப்பாகவே காணப்பட்டு வருகின்றது. இதேபோல் தனுஷ்கோடி பகுதியிலும் தொடர்ந்து பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் கொந்தளிப்பாகவே காணப்பட்டு வருகிறது.தனுஷ்கோடி பகுதியில் தொடர்ந்து வீசி வரும் பலத்த சூறாவளி காற்றால் எம்.ஆர்.சத்திரம் பகுதியில் இருந்து கம்பிப்பாடு மற்றும் அரிச்சல்முனை கடற்கரை வரை சாலையில் பல இடங்களில் மணலால் மூடப்பட்டுள்ளது. மேலும் சாலைகளை மூடியுள்ள மணலை நேற்று எந்திரம் மூலம் அகற்றும் பணியும் நடைபெற்றது.

தொடர்ந்து வீசி வரும் புழுதிக்காற்றால் வழக்கத்தை விட தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாகவே உள்ளது.

சூறாவளி காற்று, கடல் கொந்தளிப்பால் 7-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் விசைப்படகுகளும், நாட்டுப்படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் மீன்பிடி தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்