பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைப்பு

பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டது.

Update: 2019-08-13 23:00 GMT
கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒன்றியம், கொந்தகை ஊராட்சி நடுப்படுகை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித் துறையினரால் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து மணல் குவாரி அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பொதுமக்களிடம் பாபநாசம் தாசில்தார் மற்றும் கும்பகோணம் ஆர்.டி.ஓ. தலைமையில் பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

மணல் குவாரி அமைப்பு

பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி நேற்று அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டது. இந்த அரசு மணல் குவாரி மூலம் நடுப்பகுதி கிராமத்தில் கொள்ளிடத்தில் எடுக்கப்படும் மணல் நீலத்தநல்லூர் பகுதியில் இருப்பு வைத்து அங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாபநாசம் தாசில்தார் கண்ணன், கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் மணல் குவாரி அமைக்கப்பட்டு மணல் எடுக்கும் பணி தொடங்கியது.

மேலும் செய்திகள்