வேலூரில் இருந்து அனைத்து கோப்புகளும் பிரித்து கொடுக்கப்பட்டது கலெக்டர் சிவன்அருள் தகவல்

வேலூரில் இருந்து அனைத்து கோப்புகளும் பிரித்து கொடுக்கப்பட்டது என்று திருப்பத்தூர் கலெக்டர் சிவன்அருள் கூறினார்.

Update: 2019-12-02 22:30 GMT
திருப்பத்தூர், 


திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பறைகள், தற்காலிக மாவட்ட கலெக்டர் அலுவலகம் நடைபெற உள்ள இடம் மற்றும் மேல் மாடியில் ஆலோசனை கூட்டம் நடத்தும் இடத்தை கலெக்டர் சிவன்அருள், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நடைபெறும் இடத்தை முறைப்படி தொடங்கி வைத்தார்.

பின்னர் கலெகடர் சிவன்அருள் நிருபர்களிடம் கூறுகையில், மாவட்ட கலெக்டர் அலுவலகம், சப்–கலெக்டர் அலுவலகம் பக்கத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள உபயோகப்படுத்தப்படாத உள்ள அரசு பள்ளி கட்டிடங்களை கலெக்டர் அலுவலகத்திற்கு எடுக்கப்பட்டு உள்ளது. இங்கு உடனடியாக பணிகள் தொடங்கப்பட்டது. அவர்களுக்கு தேவையான கணினி, மேஜை, நாற்காலிகள் 12–ந் தேதி டெண்டர் விடப்பட்டு உடனடியாக வழங்கப்படும். 

வேலூரில் இருந்து அனைத்து கோப்புகளும் பிரித்து கொடுக்கப்பட்டுவிட்டது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சப்–கலெக்டர் அலுவலகத்தில் இருந்து உள்ளே வரவும், நகராட்சி பூங்கா எதிரே சுற்றுச்சுவர் உடைக்கப்பட்டு அதன் வழியாக வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகம் முழுவீச்சில் செயல்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது’ என்றார்.

மேலும் செய்திகள்