காரைக்காலில் ஓமியோபதி மருத்துவமனைக்கு விரைவில் நிரந்தர கட்டிடம் அமைச்சர் அறிவிப்பு

காரைக்காலில் ஓமியோபதி மருத்துவமனைக்கு விரைவில் நிரந்தர கட்டிடம் கட்டப்படும் என அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.

Update: 2019-12-31 22:30 GMT
காரைக்கால்,

புதுச்சேரி அரசு நலவழித்துறை, இந்திய முறை மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் சார்பில் மருத்துவ முகாம் காரைக்கால் ஆயு‌‌ஷ் மருத்துவமனையில் நடைபெற்றது. முகாமை புதுச்சேரி வேளாண்மைதுறை அமைச்சர் கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த இயற்கை உணவு கண்காட்சியை பார்வையிட்டார். முகாமில், மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா, அசனா எம்.எல்.ஏ, இயக்குனர் ஸ்ரீராமூலு, மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் மோகன்ராஜ், டாக்டர்கள் தியாகராஜன், லெனின் ஜீவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிரந்தர கட்டிடம்

தொடர்ந்து ஓமியோபதி மருத்துவமனைக்கு நிரந்தர கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்ய காரைக்காலில் பல்வேறு பகுதிகளை அமைச்சர் கமலக்கண்ணன், கலெக்டர் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காரைக்காலில் ஓமியோபதி மருத்துவமனைக்கு நிரந்தர கட்டிடம் கட்ட காரைக்கால் அரசு பொதுமருத்துவமனை அருகில் உள்ள பழைய கால்நடைத்துறை அதிகாரிகள் குடியிருப்பு வளாகம் உள்ளிட்ட இடங்களை பாரவியிட்டு ஆய்வு செய்து வருகிறோம். இதன்படி 3 இடங்கள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. விரைவில் ஓமியோபதி மருத்துவமனைக்கு நிரந்தர கட்டிடம் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்