தபால் வாக்குகள் எண்ணிக்கையை காட்டவில்லை: தேர்தல் அலுவலரை கண்டித்து வேட்பாளர்கள் சாலை மறியல்

தபால் வாக்குகளை வேட்பாளர்கள் முன்னிலையில் எண்ணி காட்டவில்லை என்று கூறி தேர்தல் நடத்தும் அதிகாரியை கண்டித்து வேட்பாளர்கள சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2020-01-04 23:00 GMT
ஆலங்குடி,

ஆலங்குடி அருகே உள்ள அரையப்பட்டி ஊராட்சி 2-வது வார்டில் மலர், சத்தியா ஆகிய 2 பேரும் வார்டு உறுப்பினருக்கு போட்டியிட் டனர். வாக்குகள் எண்ணிக்கையில் இருவரும் சமமான வாக்குகளை (147) இருவரும் பெற்றுள்ளனர். அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் நீங்கள் உங்கள் இருவரில் யார் வெற்றி பெற்றவர் என்பதை அதிர்‌‌ஷ்ட சீட்டு வழியில் தீர்மானிப்பது என்று தேர்தல் நடத்தும் அலுவலர் கூறியுள்ளார். இதற்கு வேட்பாளர்கள் 2 பேரும், உடன்படாமல் தபால் வாக்குகளை வேட்பாளர்கள் முன்னிலையில்காண்பித்து வெற்றி, தோல்வியை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அவர்கள் கோரிக்கையை தேர்தல் நடத்தும் அலுவலர் ஏற்றுக்கொள்ளவில்லை.

சாலை மறியல்

இந்நிலையில் இதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ஒத்துக் கொள்ளாததால், தேர்தல் அதிகாரியை கண்டித்து நேற்று அரையப்பட்டி கடைதெருவில் ஆலங்குடி-அறந்தாங்கி சாலையில் 2 வேட்பாளர்களும், தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா, ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அதிகாரிகள் தேர்தல் நடத்தும் அலுவலரை தொடர்பு கொண்டு பேசினர். இதில் வேட்பாளர்கள் இருவரையும் ஒன்றிய அலுவலகத்திற்கு வரச்சொல்லுங்கள் என்று தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். இதையடுத்து வேட்பாளர்கள் 2 பேரும் தேர்தல் நடத்தும் அதிகாரியை சந்திக்க செல்வதாக கூறியதையடுத்து மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் ஆலங்குடி-அறந்தாங்கி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்