செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 171 பேருக்கு கொரோனா பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 171 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

Update: 2020-07-03 00:49 GMT
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் கூடலூர் அஷ்டலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த 34 வயது ஆண், ஜெயராணி தெருவில் வசிக்கும் 70 வயது முதியவர், 23 வயது இளம்பெண், திருஞானசம்பந்தர் தெருவை சேர்ந்த 24 வயது வாலிபர், கூடுவாஞ்சேரி விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர், ஊரப்பாக்கம் காளிதாஸ் நகரில் வசிக்கும் 33 வயது இளம்பெண், 9 வயது சிறுவன், காயரம்பேடு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி, வண்டலூர் லட்சுமி நகர் 5வது தெருவில் வசிக்கும் 64 வயது மூதாட்டி உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 171 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,807 ஆக உயர்ந்தது. இவர்களில் 3,014 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 78 வயது மூதாட்டி, 54 வயது ஆண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்தது. மற்றவர்கள் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சியில் உள்ள ஆஷா நகர் பகுதியைச் சேர்ந்த 38 வயது ஆண், ஆதனூர் ஊராட்சியை சேர்ந்த 32 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 112 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,151 ஆனது. இவர்களில் 888 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 1,238 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 25 பேர் பலியானார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனால் கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையம் மூடப்பட்டது. எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் அருகே உள்ள வாணியன்சத்திரம் கிராமத்தில் 65 வயது மூதாட்டிக்கு கொரோனா உறுதியானதால் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இவர்களுடன் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 164 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,167 ஆனது. இவர்களில் 2,648 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 1,440 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 79 பேர் பலியானார்கள்.

பள்ளிப்பட்டில் வசித்து வரும் மருந்து கடைக்காரருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டுக்கு எதிரே உள்ள இந்தியன் வங்கி கிளையை 7 நாட்களுக்கு திறக்க கூடாது என்று தாசில்தார் செல்வகுமார் நோட்டீஸ் வழங்கினார்.

இந்த நிலையில் வங்கி கிளை நேற்று திறக்கப்பட்டு அங்கு வாடிக்கையாளர்கள் அதிக அளவில் குவிந்தனர். இதையடுத்து தாசில்தார் செல்வகுமார் முன்னிலையில் வங்கி கிளைக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்