புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

கருங்காலக்குடியில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2021-10-04 01:42 IST
கொட்டாம்பட்டி,

மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் கருங்காலக்குடியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள கடைகளுக்கு குட்கா புகையிலை பொருட்கள் வினியோகம் செய்த நபரை மோட்டார் சைக்கிளுடன் மடக்கி பிடித்தனர். அவரிடமிருந்து 20 கிலோவுக்கும் மேற்பட்ட பண்டல்கள், ரூ.13 ஆயிரம், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்து கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கருங்காலக்குடி ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்த முருகன் மகன் சண்முகராஜ்(வயது 27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்