கேரளாவில் தெருநாய்கள் தாக்கி ஒன்றரை வயது குழந்தை படுகாயம்

கேரளாவில் தெருநாய்கள் தாக்கியதில் ஒன்றரை வயது குழந்தை படுகாயமடைந்தது.

Update: 2022-12-31 01:22 GMT

கோப்புப்படம்

கொல்லம்,

கேரளாவில் தெருநாய்கள் தாக்கியதில் ஒன்றரை வயது குழந்தை படுகாயமடைந்தது. கொல்லம் மாவட்டம் மய்யநாடு பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

குழந்தைக்கு உணவு கொடுத்துவிட்டு குழந்தையின் பாட்டி வீட்டிற்குள் சென்றபோது, குழந்தை வீட்டின் முன்பு தனியாக விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென குழந்தை அலறும் சத்தம் கேட்டு, வீட்டின் முன்பு வந்து பார்த்தபோது, சுமார் 25 தெருநாய்கள் குழந்தையை தாக்கிக் கொண்டிருந்தன.

இதையடுத்து அருகிலிருந்த மரப்பலகையை எடுத்து குழந்தையின் பாட்டி நாய்களை துரத்தினார். இதில் குழந்தை படுகாயமடைந்தது. அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது குழந்தை மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

சமீப காலமாக, கேரளாவில் பல இடங்களில் தெருநாய்களின் அச்சுறுத்தல் அதிகமாகியுள்ளன. மேலும், இந்த ஆண்டு மட்டும் 20 பேர் வெறிநாய்க்கடிக்கு ஆளாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்