மின்னணு, செக் முறையில் சம்பளம் அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்

புதுடெல்லி, உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் செல் லாது என்ற அறிவிப்பை மத்திய அரசு கடந்த மாதம் 8-ந்தேதி வெளியிட்டது. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் மக்களிடம் பணப்புழக்கம் ஏற்படுவதில் சிக்கல் நிலவுகிறது.அந்த சிக்கலை

Update: 2016-12-21 07:44 GMT
புதுடெல்லி,

உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் செல் லாது என்ற அறிவிப்பை மத்திய அரசு கடந்த மாதம் 8-ந்தேதி வெளியிட்டது. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் மக்களிடம் பணப்புழக்கம் ஏற்படுவதில் சிக்கல் நிலவுகிறது.அந்த சிக்கலை நிவர்த்தி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக  ரொக்கப் பணம் இல்லாமல் மின்னணு மூலம் பண பரிமாற்றம் செய்ய நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமை யில் டெல்லியில் இன்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இதற்கான அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.அனைத்து விதமான வர்த்தகத்திலும் மின்னணு மற்றும் செக் மூலம் பண பரிமாற்றம் செய்யவும், மத்திய அரசு ஊழியர்களுக்கு மின்னணு முறையில் சம்பளம் பட்டுவாடா செய்யவும் முடிவு செய்துள்ளது.
இதற்கான அவசர சட்டம் விரைவில் பிறப்பிக்கப்படஉள்ளது.

மேலும் செய்திகள்